நகரப் பகுதியில் உள்ள வேகத்தடைகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
பெரம்பலூர் முக்கிய வீதிகளில் போடப்பட்டுள்ள வேகத்தடைகள் சரியாக இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்;
பெரம்பலூர் மாவட்டம் நகர பகுதியில் உள்ள எளம்பலூர் சாலையில் இருந்து ரோவர் பள்ளி வழியாக செல்லும் சாலை கோனார் காம்ப்ளக்ஸ் அருகே மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் உள்ள வேகத்தடையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.