
வாணாபுரம் பஸ் நிறுத்தத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.25 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கட்டடத்தின் மேற்பகுதியில் கான்கிரீட் போடப்பட்டது. இந்நிலையில், பொறியாளரிடம் அனுமதி பெறாமல் கான்கிரீட் உறுதியாகும் முன்னரே கட்டுமான பணியாளர்கள் கடந்த மார்ச்., 25ம் தேதி சென்ட்ரிங் பலகைகளை அகற்றினர். அப்போது, கட்டடத்தின் அலங்கார வளைவு திடீரென சரிந்து விழுந்தது. இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட செயற்பொறியாளர் செல்வகுமரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி ஆகியோர் பயணியர் நிழற்குடை கட்டடத்தை பார்வையிட்டு, அதன் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து கட்டுமான பணியை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். அப்போது, பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், பொறியாளர் வேல்முருகன், ஜெயபிரகாஷ், முத்துராமன், துணை பி.டி.ஓ., தினகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.