ராணிப்பேட்டை:இருசக்கர வாகனம் மீது லாரி மோதி காவலர் பலி!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி காவலர் பலி!;

Update: 2025-04-03 04:23 GMT
  • whatsapp icon
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதி ஜெகன்யில் உள்ள மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரிமளா. இவரது கணவர் குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் ஜெகன் (வயது 27). கடந்த 2017-ம் ஆண்டு முதல் சென்னையில் ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தற்போது சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆணையரின் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை காட்பாடியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். பெல் நரசிங்கபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த போலீஸ்காரர் ஜெகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News