நாகை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில்
வீட்டு உபயோக மின் சாதன பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சி 9-ம் தேதி தொடக்கம்;

நாகை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய மேலாளர் மணிகண்டன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை புதிய கடற்கரை சாலை மேட்டு பங்களா அருகில் கேபிஎஸ் காம்ப்ளக்ஸில், இயங்கி வரும் நாகை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி, வருகிற 9-ம் தேதி தொடங்கி 30 நாட்களுக்கு, மத்திய அரசு சான்றிதழ் பயிற்சி தொடங்க உள்ளது. பயிற்சியில், நாகை மாவட்ட கிராமப்புறத்தினர் மட்டும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி, முற்றிலும் கட்டணம் இல்லாத பயிற்சி ஆகும். 18 முதல் 45 வயதுள்ளவர்கள் பயிற்சியில் சேர தகுதியானவர்கள். இப்பயிற்சியில், சேர விரும்புபவர்கள், 8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள், ஆதார் நகல்-1, குடும்ப அட்டை நகல்-1, டிசி (அ) மார்க் சீட்-1, வங்கி கணக்கு அட்டை நகல்-1, 100 நாள் அட்டை அல்லது மகளிர் குழு தீர்மானம் -1, புகைப்படம்-1 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். பயிற்சியில், பேசிக் ஒயரிங், சீரியஸ் போர்டு, சீலிங் ஃபேன் காயில் சுற்றுதல், டேபிள் ஃபேன் காயில் கட்டுதல், மிக்ஸி காயில் கட்டுதல், அயன் பாக்ஸ் ரிப்பேர், கிரைண்டர் மோட்டார் காயில் கட்டுதல், வாட்டர் ஹீட்டர் ரிப்பேர், இண்டக்ஷன் ரிப்பேர், மோட்டார் காயில் கட்டுதல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிவில், ரீவைண்டிங் ஷாப் வைப்பதற்கு வங்கி கடன் பரிந்துரை கடிதம் வழங்கப்படும். பயிற்சியில், 35 நபர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு,6374005365, வாட்ஸ் அப் 9047710810 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.