கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிணற்றில் மிதந்த மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டது;

Update: 2025-04-04 03:51 GMT
மதுரை மாவட்டம் செக்கானூரணி அடுத்த பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சிவகாமி (70) என்பவர் நேற்று (ஏப்.3) காலை வெளியே சென்றவர் வீட்டுக்குத் திரும்ப வில்லையாம். இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகேயுள்ள கிணற்றில் சிவகாமி உயிரிழந்த நிலையில் மிதந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செக்கானூரணி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News