சேலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி

உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-04 06:52 GMT
சேலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி
  • whatsapp icon
அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சேலம் கோட்டை பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ரவி, நித்தியானந்தம், முனியப்பன் உள்பட உள்ளாட்சி பணியாளர்கள், அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், அனைத்து துறைகளிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தினக்கூலி மற்றும் பகுதிநேர பணியாளர்களின் எதிர்காலம் வாழ்வாதாரம் கருதி பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News