சேலம் கருக்கல்வாடியில் செல்லியம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்;

சேலம் இரும்பாலை கருக்கல்வாடி பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி செல்லியம்மன் கோவிலில் மகமேறு புறப்பாடு நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு அம்மனை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா சென்று காலை 9 மணி அளவில் செல்லியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலையில் பூங்கரகமும், மாலையில் அக்னி கரகமும், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டம், மற்றும் வாணவேடிக்கை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.