
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருள்மிகு மேலவாசல் பிரசன்ன விநாயகர் திருக்கோவில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இன்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பித்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.