மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ
மதுரையில் மூக்கையா தேவர் சிலைக்கு தளபதி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்;

மதுரையில் தேசிய சிந்தனையாளர் கல்வி வள்ளல் மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஏப்.4) மதுரை அரசரடி ரவுண்டானா அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு திமுக நகர் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான தளபதி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.