திருப்பத்தூரில் தவெக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் தவெக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-04 09:42 GMT
திருப்பத்தூர் மாவட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து திருப்பத்தூர் பாதர் ஸ்டேட் வங்கி அருகே நூற்றுக்கு மேற்பட்ட தவெக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நேற்று மக்களவையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்ட விவாதத்தில் வக்பு வாரிய திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழகம் எங்கும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில்... திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத வங்கி எதிரில் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் முனுசாமி தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தாதே, வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெறு, வக்பு வாரிய சொத்துக்களை பராமரிக்கும் குழுவில் மற்றவர்கள் எதற்கு, சிறுபான்மையின மக்களை வஞ்சிக்காதே உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துணை செயலாளர் ஒன்றிய கிளை மகளிர் அணி உள்ளிட்ட திருப்பத்தூர் மேற்கு மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News