இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் ஆலூர் அரசுப் பள்ளியில் மரம் நடு விழா நடைபெற்றது.மத்திய அரசின் ராஷ்டிரிய அவிஷ்கர் சப்தா திட்டத்தின் கீழ் தேசிய கண்டுபிடிப்பு வாரம் மற்றும் மரக்கன்றுகள் நடும் திட்டம் மூலம் பள்ளியில் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ.செல்வக்குமார் தலைமை தாங்கினார்.