வாணியம்பாடியில் பெய்த கனமழையினால், கழிவுநீருடன் சேர்ந்து வீடு மற்றும் கடைக்குள் புகுந்த மழைநீர்
வாணியம்பாடியில் பெய்த கனமழையினால், கழிவுநீருடன் சேர்ந்து வீடு மற்றும் கடைக்குள் புகுந்த மழைநீர்;

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெய்த கனமழையினால், கழிவுநீருடன் சேர்ந்து வீடு மற்றும் கடைக்குள் புகுந்த மழைநீர் கனமழையினால் சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளை. திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 34 ஆவது வார்டு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சதீஸ் என்பவரது வீடு மற்றும் மளிகை கடையினுள் மழைநீர், கழிவுநீருடன் புகுந்ததால், சதீஸ் வீட்டினுள் இருந்த உடமைகள் மிகுந்த சேதமடைந்தது, அதனை தொடர்ந்து நியுடவுன் பகுதியில் உள்ள புங்க மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அதனை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுப்பட்டனர்..