தொல்லியல் ஆய்வு செய்ய கோரிக்கை
மதுரை மேலூர் அருகே தொல்லியல் துறை ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலம், வஞ்சிநகரம்,கொடுக்கம்ட்டி ஊராட்சிகளை உள்ளடக்கியது கல்லங்காடு பகுதி.கல்லங்காடு சுமார் 400ஏக்கர் பரந்து விரிந்த கல்லங்காடு சமவெளிப் பகுதியாகும். இங்கு சிப்காட் அமைக்கப்படுவதால் தங்கள் விவசாயத்திற்கான நீராதாரங்கள்,வழிப்பாட்டுத்தலங்கள்,பண்பாட்டு விழாக்,கோயில் காடுகள், பல்லுயிர்கள் தொல்லியல் சின்னங்கள் பாதிக்கப்படும் என சுற்றறுவட்டாரத்தில் உள்ள 18 மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த 23.03.25 அன்று கல்லங்காட்டில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்திலும் கல்லங்காட்டில் தொல்லியல் ஆய்வு நடத்ப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு, தொல்லியல் துறையினரிடம் நேரிலும் வலியுறுத்தினர். இந்த நிலையில் நேற்று (ஏப் 4) மதுரை மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆனந்தி கல்லங்காடு பகுதியில் பெருங்கற்கால, சின்னங்கள் சிவன்கோயில் தமிழ் கல்வெட்டு உள்ளிட்டவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார்..பானை ஓடுகள்,இரும்பு படிமம் நிறைந்த கற்களின் மாதிரிகளை சேகரித்துக்கொண்டதோடு இப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். மதுரை மாவட்டத் தொல்லியல் அலுவலர். மதுரை மாவட்டத் தொழில் அலுவலர் உடையப்பன் ஆசிரியர் தலைமையில் ஊர் மக்கள் வரவேற்று தொல்லியல் எச்சங்கள் உள்ள இடங்களை சுற்றிக் காட்டினர்.