ஆலங்குளம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு;

Update: 2025-04-05 01:22 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், ஊத்துமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி குறித்தும், மாணவா், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், வடக்கு காவலாகுறிச்சி ஊராட்சி நவநீதகிருஷ்ணபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன் வாடி மையத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என உரிய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் நிஷாந்தினி, ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ, வட்டார வளா்ச்சி அலுவலா் கல்யாண ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Similar News