குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை;
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் ஐந்தருவி, பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலத்தில் அருவிக்குச் செல்லும் நடைபாதை வரை தண்ணீா் சீறிப் பாய்ந்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.