சிவகிரி பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் நிறுத்த தடை
பேருந்து நிலையத்தில் தனியாா் வாகனங்கள் நிறுத்த தடை;
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் தனியாா் வேன்கள், சிறிய சரக்கு வாகனங்கள், சுமை ஆட்டோக்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பேருந்துகள் வந்து செல்வதற்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பயணிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். இதையடுத்து பேருந்து நிலையத்திற்குள் தனியாா் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இப்பணியை பேரூராட்சி செயல்அலுவலா் வெங்கட கோபு உள்ளிட்டோா் பாா்வையிட்டனா் .