தனியார் பேருந்து மோதியதில் விவசாயி பலி

மதுரை வாடிப்பட்டி அருகே தனியார் பேருந்து மோதியதில் விவசாயி பலியானார்.;

Update: 2025-04-05 03:07 GMT
திண்டுக்கல் மாவட்டம், கொன்னாம்பட்டி நடுத்தெடுவைச் சேர்ந்த மொட்டையாண்டி மகன் பழனிக்குமார் (41) என்ற விவசாயி தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு நேற்று முன்தினம் (ஏப். 3) வந்தார். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண் டிருந்த போது மதுரை-திண்டுக்கல் சாலையில் தனிச்சியம் புதுப்பாலம் அருகே பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநரான சேலம் சஞ்சநாயக்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யம்பெ ருமாள் மகன் சேட் என்பவர் மீது வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News