சின்னசேலத்தில் விவசாயிகள் சங்க விழா

விழா;

Update: 2025-04-05 03:21 GMT
சின்னசேலத்தில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் அறிமுக விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சின்னசேலத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.தனியார் வணிக வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் ரகுநாதன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, மாவட்ட அமைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். மாநிலத் தலைவர் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், மரவள்ளிக்கிழங்கு விலை ரூ.1,000 ஆக நிர்ணயம்; கரும்பு, மக்காச்சோளம், நெல், மஞ்சள் உள்ளிட்டவைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும் கள்ளக்குறிச்சியில் சேகோ சர்வ் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News