சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில்

ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு;

Update: 2025-04-05 08:21 GMT
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அதன்படி சட்டசபையில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 100 கோவில்களில் புதிதாக ஆன்மிக புத்தக நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சுற்றுபிரகாரத்தில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் நேற்று திறக்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் அனைத்து தரப்பு மக்களும் அரிய ஆன்மிக புத்தகங்களை பெற்று பயன்பெறலாம் என கோலில் நிர்வாகம் கூறியுள்ளது. விழாவில் அறங்காவலர்கள், செயல்அலுவலர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News