சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே வெள்ளைக்குட்டை தெருவை சேர்ந்த பழனிவேல் மனைவி கலைச்செல்வி (வயது 51). இவர் வீட்டில் தனியாக இருந்த போது ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த நபர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டபடி திடீரென கலைச்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கலியை பறித்து சென்றார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கலைச்செல்வியிடம் தங்க சங்கிலி பறித்ததாக மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ராஜூ என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், சேலம் வீராணம் பகுதியில் உள்ள அவருடைய அக்காள் வீட்டில் தங்கி இருந்து கேட்டரிங் வேலை செய்து வந்ததுடன், ஆன்லைன் விளையாட்டு மூலம் ஏராளமான பணத்தை இழந்ததும், அதனால் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.