சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி
கலெக்டர் பிருந்தா தேவி தகவல்;
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: - சேலம் அரசு ஐடிஐயில் கடிகாரம் பழுது நீக்கம் தொடர்பான மூன்று மாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 18ஆம் தேதிக்குள் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பதிவு செய்து பயிற்சி பெற்று பயன்பெறலாம். சேர்க்கைக்கு அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் நான்கு புகைப்படங்களுடன் நேரில் அணுகி விவரம் பெற வேண்டும். இப்பயிற்சிக்கு நேரடியாகவோ, அல்லது google படிவம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதே போல் 16 மணி நேரம் கொண்ட கார் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகிய காலப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி நான்கு நாட்களுக்கு தலா 4 மணி நேரம் வீதம் நடைபெறும். இதற்கான கட்டணமாக ரூபாய் 1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிறைவு பெற்ற பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.