சுரண்டையில் பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு;

Update: 2025-04-05 09:31 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்துள்ளார். இதை தொடர்ந்து பள்ளி மாணவி திடீரென்று மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த பள்ளி மாணவி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News