நந்திவேடுதாங்கல் பகுதியில் மண் திருடிய லாரி டிரைவர் கைது
நந்திவேடுதாங்கல் பகுதியில் மண் திருடிய லாரி டிரைவர் கைது;
ராணிப்பேட்டை மாவட்டம் நந்திவேடுதாங்கல் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் அனுமதி இல்லாமல் பொக்லைன் மூலம் மண் அள்ளி லாரியில் கடத்துவதாக அரக்கோணம் தாலுகா போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் தாலுகா போலீசார் இன்று அதிகாலை சம்பவ இடத்தில் கண்காணித்த போது பொக்லைன் இயந்திரத்தில் மண் திருடி கொண்டிருந்த பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த மகேஷ் என்பவரை கைது செய்தனர். லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.