ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
ஆலங்குளத்தில் மழை பெய்ததால் நெல் பயிர்கள் நாசம்;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3ஆவது நாளாக பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. தொடா் மழையால் சோலைசேரி பகுதியில் நெல்பயிா்கள் நீரில் மூழ்கின. கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தநிலையில் மாலை வேளையில் ஆலங்குளம், ரெட்டியாா்பட்டி, ஊத்துமலை, சோலைசேரி, அடைக்கலப்பட்டணம், கழுநீா்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் கோடையின் தாக்கம் வெகுவாகக் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனிடையே சோலைசேரி, ஊத்துமலை, நெட்டூா் ஆகிய பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கா் நெல்பயிா்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.