தமிழக பாஜக பொறுப்பாளர் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி அளித்தார்.;

Update: 2025-04-06 01:57 GMT
ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற உள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று ( ஏப்.5)மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள பாம்பன் ரயில் பால திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசிற்கு வக்பு வாரியத் சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கு வங்கிக்காக திமுக காங்கிரஸ் கட்சியினர் அரசியல் செய்கின்றனர் இது ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியத்தின் பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. திருச்சி அருகே ஒரு முழு கிராமமும் வக்பு வாரிய சொத்து என அறிவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் வட இந்தியாவில் இதுபோன்ற பல நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வாக்கு வங்கிக்காக திமுகவினர் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல திட்டங்களை கொண்டு வந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை குறை சொல்கின்றனர். கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் அரசியல் ஜிமிக் செய்கிறார். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவு வழங்கப்பட்டது. அப்போது எதுவும் செய்யாமல் இப்போது திமுகவினர் மாற்றி பேசுகிறார்கள். ஆனால் மக்களுக்கு திமுகவினரின் சாயம் வெளுத்து விட்டது. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று இரண்டை மற்றும் நிறைவேற்றி விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். சட்ட ஒழுங்கு சரியில்லை, மணல் குவாரி பிரச்சனையுள்ளது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இதுதான் திராவிட மாடல் என முதல்வர் சொல்கிறார். மக்களை திசை திருப்பதற்காக மொழிப்பிரச்சனை போன்றவற்றைக் கிளப்புகிறார்கள். மக்களை உணவுப்பூர்வமாக தூண்டப் பார்க்கிறார்கள். தமிழ்நாடு சித்தர்பூமி. ஆனால் வாக்கு பெறுவதற்காக தென்னிந்தியாவில் உள்ள முதல்வர்களை அழைத்து கூட்டம் போடுகிறார்கள். ஆனால் பொய் பிரச்சாரம் தான் சொல்கிறார்கள். பிரதமர் மோடி என்ன செய்தார் என்று நாங்கள் சொல்கிறோம் ஆனால் அவர்களால் அவர்கள் செய்ததை சொல்ல முடியாது. பிரதமர் மோடி வந்த பிறகு ராமர் கோயில் மீட்பு உட்பட பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திலும் உயர்வு பெற்றுள்ளோம். வக்பு வாரிய திருத்தம் பிரச்சினையை கிளப்ப பார்க்கிறார்கள். ஆனால் மக்களுக்கு தெரியும் அது முழுமையாக ஏழை மக்களுக்கான சட்ட திருத்தம். குறிப்பிட்ட சமூகத்திற்காக திமுக கூட்டணி செய்ய பார்க்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மக்களின் நம்பிக்கைகள் குறித்து பேசி அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். திமுகவினர் செய்ததை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பாஜக ஒழுக்கமான கட்சி. கட்சி தேர்தல் விதிமுறைகள் படி நடைபெறும். அண்ணாமலை நேர்மையான சிப்பயாயி. கட்சி முடிவெடுக்கும் தற்போது வரை அண்ணாமலை தான் தலைவர். கட்சித் தேர்தல் பல மாநிலங்களில் நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு வழிமுறைகள் படி நடைபெறும். கட்சிக்குள் பிரச்சனை ஏற்படுவதற்காக சில விஷமிகள் இந்த பிரச்சனையை கிளப்புகிறார்கள். கட்சி உயர் மட்ட குழு முடிவுகளை எடுக்கும். அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என சுதாகர் ரெட்டி கூறினார்.

Similar News