தொகுதி வரையறை தி.மு.க., திட்டவட்டம்

திட்டவட்டம்;

Update: 2025-04-06 04:00 GMT
மத்திய அரசு தொகுதி மறுவரையறை திட்டத்தை கைவிடும் வரை தி.மு.க., தொடர்ந்து. போராட்டம் நடத்தும் என, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய அரசின், தொகுதி மறுவரையறை என்பது தமிழகத்தையும், தென் மாநிலங்களையும் வஞ்சிக்கும் செயல். இதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின், 63 கட்சிகளை ஒருங்கிணைத்து பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் இணைந்து இந்தியாவிற்கே முன்னோடியாக கூட்டம் நடத்தி உள்ளார். இதன் மூலம் இந்தியா முழுவதும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு உருவாகி உள்ளது. மத்திய அரசு, இத்திட்டத்தை, 25 ஆண்டுகள் தள்ளிவைக்க வேண்டும். இதில் மத்திய அரசு, பின் வாங்கும் வரை, மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News