
சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 30). தறித்தொழிலாளி. இவருடைய தம்பி கவுதம். அண்ணன், தம்பி இருவருக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கவுதம், கட்டையால் அண்ணனை அடித்துக்கொலை செய்தார். இதை யடுத்து அவர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கவுதமை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் இடங்கணசாலை பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தப்பி ஓடிய போது தவறி கீழேவிழுந்தார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கவுதமை கைது செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு காலில் மாவு கட்டு போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.