திருவேங்கடத்தில் மயானத்தில் மின் வசதி பொதுமக்கள் கோரிக்கை
மயானத்தில் மின் வசதி பொதுமக்கள் கோரிக்கை;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் உள்ள நேற்று இரவு ஓய்வு பெற்ற காவல் துறை இருளாண்டு என்பவர் உடல்நிலை குறைவால் காலமானார். இவரது உடலை ஆவுடியாபுரம் செல்லும் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதனால் இறுதிகாரியம் செய்ய இங்கு வரும் பொதுமக்கள் மின் வசதி இல்லாததால், வீட்டிலிருந்து பெட்ரோமாக்ஸ் லைட் எடுத்து செல்ல வேண்டியதுள்ளது. மழைக்காலங்களில் மயானப்பகுதியில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தற்போது இந்த மின் விளக்கு கம்பம் காட்சிப்பொருளாகவே உள்ளது. உடனே பேரூராட்சி அதிகாரி வந்து வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.