யானை மலை பகுதியில் மரக்கன்றுகளை நடும் விழா
மதுரை அருகே மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது;
மதுரை அருகே யானைமலை கிரீன் பவுண்டேஷன் 209 வார நிகழ்வு நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா மதுரை உயர்நீதிமன்ற கிளை அருகில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். ஆலோசகர் சிலம்ப மாஸ்டர் பாண்டி வரவேற்றார். தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் கார்த்திக் அவர்கள் நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு பற்றி சிறப்புரை வழங்கினார். நம்மாழ்வார் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம்; மண் மலடாவதை தடுப்போம்: பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்விற்கு தேவையான மரங்களை, வலைகளை பரமேஸ்வரன் வழங்கினார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பாஸ்கரன், பசுமைச் சாம்பியன் அசோக்குமார், மதுரை ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனர் உமேஷ், ஸ்டெல்லா மேரி, மலர்மங்கை, மணிமாலா மற்றும் பெற்றோர்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் கைகளினால் மரக்கன்றுகள் நடப்பட்டன. நீர் ஊற்றப்பட்டது. உயர் நீதிமன்ற கிளை முதல் உத்தங்குடி வரை உள்ள மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டன. மாணவி தர்ஷினி நன்றி கூறினார்.