மின்னல் தாக்கி மூதாட்டி பலி
செந்துறை அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

அரியலூர், ஏப்.6- அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பெய்த மழையின் போது, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். செந்துறை அருகேயுள்ள மதுரா சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மனைவி இந்திராகாந்தி(62). வியாழக்கிழமை பிற்பகல் இவர், அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது பெய்த மழையின் போது, இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இந்திரா காந்தி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற குவாகம் காவல் துறையினர், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.