பிரதமர் வரவேற்பு நிகழ்வை புறக்கணித்த காங்கிரஸ் எம்.பி.

மதுரை வரும் பிரதமர் வரவேற்பு நிகழ்வை காங்கிரஸ் எம.பி புறக்கணித்தார்.;

Update: 2025-04-06 11:15 GMT
ராமேஸ்வரம் புதிய செங்குத்து ரயில் பாலத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் இன்று (ஏப்ரல் .6) மாலை மதுரை வருகிறார் மதுரையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். மதுரை வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் குழுவில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் மதுரை விமான நிலைய ஆலோசனை குழு தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும்மான மாணிக்கம் தாகூர் பெயரும் இருந்தது. தற்போது விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பிரதமர் மோடி வரும் நிகழ்ச்சியை புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News