சரவணப் பொய்கையில் மூழ்கி ஒருவர் பலி

மதுரை திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி.;

Update: 2025-04-07 01:55 GMT
மதுரையில் நேற்று மாலை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் நிறைவுநாள் விழா பேரணியில் பங்கேற்க வந்த கட்சி கோவை நிர்வாகியான நந்தகுமார் (42) என்பவர் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்ற போது அவர் ஆழமான பகுதிக்குச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவரது சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News