கார்கள் மோதியதில் ஒருவர் பலி

மதுரை பேரையூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானார்.;

Update: 2025-04-07 01:58 GMT
கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த முகமது நவ்பால்( 30) என்பவர் மதுரை தனியார் ஓமியோ மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இவர் நேற்று (ஏப்.6) காலை கேரளா செல்வதற்காக காரில் தனியாக டி.கல்லுப்பட்டியை அடுத்த கரையாம்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது அதேநேரம் தென்காசி மாவட்டம் கடையநல்லுார் செகுதுமான் (71) இவரது மனைவி பைரோஜா( 57) முகமதுகாசிம்( 51), ஆகியோர் மதுரை விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதியதில் செகுதுமான் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த பைரோஜா, முகமதுகாசிம் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News