கலவை:நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்காததால் விவசாயிகள் அவதி!
நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்காததால் விவசாயிகள் அவதி!;
கலவை சுற்றுவட்டார பகுதிகளான சென்னசமுத்திரம், வளையாத்தூர், மேல்புலம் ஆகிய கிராமங்களில் என்.சி.சி.எப். என்ற நிறுவனத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலைய மையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து 40 கிலோ நெல் மூட்டைகளாக பெறப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் இந்த நிறுவனத்தின் மூலம் விவசாயிகளிட மிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை வழங்கப்படாததால் விவசாயிகள் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு உரிய பணத்தை தகுந்த நேரத்தில் வழங்காத தால், நெல் வயலுக்கு செலவு செய்த பணத்தை ஈடு செய்ய முடியாமல் உள்ளனர்.நெல் மூட்டைகளை விற்ற பணம் வந்தால் மட்டுமே ஈடு செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால் மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் பணத்தை பெற்றுத்தர வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.