கட்டளை: குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை;

Update: 2025-04-07 04:05 GMT
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கட்டளை ஊராட்சி. இந்த ஊராட்சியில் இருந்து காவேரிப்பாக்கம் செல்லும் இணைப்பு தார்சாலை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த தார்சாலை அய்யம்பேட்டை சேரி, மகாணிப்பட்டு, உப்பரந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களின் இணைப்பு சாலையாகவும் இருந்து வருகிறது. இந்த சாலையில் பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால்,பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வரும் போது அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதுடன், விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். விளைபொ ருட்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, சேதமடைந்துள்ள இச்சா லையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம், துறை சார்ந்த அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News