நாகை - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பூண்டி பகுதியில்

சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்துக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள்;

Update: 2025-04-07 08:37 GMT
தூத்துக்குடியில் இருந்து, நாகை வழியாக விழுப்புரம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில், நாகை மாவட்டம் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில், வீட்டில் முறையாக கால்நடைகள் கட்டி பராமரிக்கப்படாததால் சாலையில் சுற்றி தெரிகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் காரில் செல்பவர்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், சாலையின் குறுக்கே கால்நடைகள் செல்வதோடு அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் போது, வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாக நேரிடுகிறது. ஆகவே, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில்,  கால்நடைகள் வளர்ப்போர் முறையாக அதனை கட்டி பராமரிக்க வேண்டுமென்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், அந்தந்த ஊராட்சியை சேர்ந்த அலுவலர்கள், கால்நடைகளை பொறுப்பில்லாமல் சாலையில் திரிய விடுவதை தடுக்க, கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

Similar News