மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கைது.
மதுரையில் இன்று மாலை ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இருந்து இன்று ( ஏப்.7) மாலை ரயில் நிலையம் நோக்கி ரயில் மறியல் செய்ய மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சுமார் 40க்கு மேற்பட்டோர் மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக புறப்பட்டனர். இவர்களை போலீசார் ரயில் நிலையம் அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.