மக்கள் நீதி மய்யம் மகளிரணி ஆலோசனை கூட்டம்

மதுரையில் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-07 12:09 GMT
மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஏப்.6) மகளிரணி மாநிலச் செயலாளர் பத்மாவதி ரவிசந்திரன் (மதுரை, நெல்லை மண்டலங்கள்), மண்டல அமைப்பாளர் கலையரசி ஆகியோரின் தலைமையில் மதுரையில் நடைபெற்றது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர் சேர்ப்பு, மகளிரணியை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமமாலா மற்றும் உதவி ஆய்வாளர் விஜயலக்ஷ்மி ஆகியோர் பங்கேற்று, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான `காவலன் ஆப்' குறித்து விளக்கினர்.

Similar News