கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி
பனங்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பனங்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 காளைகள் மற்றும் 162 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட மாட்டினை 9 வீரர்கள் சேர்ந்து 25 நிமிடங்களுக்குள் அடக்க வேண்டும். இல்லையென்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இப்போட்டியில் 8 மாடுகள் பிடி மாடுகளாக அறிவிக்கப்பட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டு போட்டியை நாட்டரசன்கோட்டை, கண்டிப்பட்டி, கல்லல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் உற்சாகமாக கண்டுகளித்தனர்