மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி
மதுரை உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார்.;
மதுரை மாவட்டம் எழுமலை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டியில் வசிக்கும் குணசேகரன் என்பவரது புதிய வீட்டுக்கு சென்ட்ரிங் பணியில் டி.பள்ளபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (45), மற்றும் டி.பெருமாள்பட்டியை சேர்ந்த சிவசாமி (47) ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சென்ட்ரிங் கம்பி கட்டும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் செந்தில்குமார் அதே இடத்தில் பலியானார்.சிவசாமி படுகாயமடைந்தார். இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.