மாற்றுத் திறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கல்
சிவகங்கையில் 16 மாற்றத்திறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றையதினம் (07.04.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 14 மாற்றுத்திறனுடைய தம்பதியினருக்கு திருமண நிதியுதவித்தொகையுடன் தலா 8 கிராம் தங்க நாணயத்தினை வழங்கினார். இந்நிகழ்வின் போது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்