சீர் செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம்ட்டம்
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் திருத்தேர் சீரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது;
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் உள்ள தேர் 2007-ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இத்தேரின் மரச்சிற்பங்கள் சேதமடைந்தும், பல இடங்களில் மரப்பலகைகள் பெயர்ந்தும்,;; இரும்பு பட்டைகள் பழுதடைந்தும் இருந்தது. வரும் 11ஆம் தேதி திருத்தேர்விழா இருப்பதால் பக்தர்கள் உதவியுடன் ரூ.8.50 லட்சம் செலவில் தேர் புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்தது. பக்தர்கள் முன்னிலையில், பட்டாச்சாரியார்கள் தேரில் உள்ள மரசிற்பத்தாலான பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மகாதீபாராதனை காட்டினர். தொடர்ந்து தேர் பொக்லைன் இயந்திர உதவியுடன் தேரடிக்கு கொண்டு செல்லப்பட்டது.