
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே காக்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி கலா(50). இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஆம்பூர் சென்று கொண்டிருந்த போது எதிரே பொன் பாண்டியன் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் கலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.