
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வரதராஜன் ஆகியோர் தென்காசி - மதுரை சாலையில் வாகன தணிக்கை சோதனை செய்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர், இதில் சிவகிரி பகுதியை சேர்ந்த பூலித்துரை மகன் காசித்துரை என்ற கார்த்திக் காரில் சுமார் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசார் அவரை கைது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.