ஆம்னி பேருந்தில் தீ விபத்து
மதுரை திருமங்கலம் அருகே ஆம்னி பேருந்து முன் பகுதி தீ பிடித்து எரிந்தது.;
சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் (ஏப்.6)இரவு சென்று கொண்டிருந்தபோது மதுரை- திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகே அதிகாலை 5.45 மணிக்கு சென்ற போது, திடீரென பேருந்தின் முன் பகுதியிலிருந்து புகை கிளம்பியது. இதையறிந்த ஓட்டுநர் சுப்பு ராஜா பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, பயணிகளை உடனடியாக கீழே இறங்கச் செய்தார். சிறிது நேரத்தில் தீ மளமள வென்று பரவி பேருந்து முன்பகுதி எரிந்தது. இதையறிந்த கள்ளிக்குடி தீய ணைப்புத் துறையினர் சென்று பேருந்தில் பற்றிய தீயை அணைத் தனர். இதில் பேருந்தின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.