
செங்குறிச்சி ஸ்ரீ கனகவள்ளி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ராம நவமி மகோற்சவ விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ராம நவமி விசேஷ திருமஞ்சனம் நடந்தது.இரவு 9:00 மணியளவில் சீதாதேவி சமேத ராமச்சந்திர மூர்த்தி பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், அனுமன் வாகனத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சவுந்தர்ராஜ ஐயங்கார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்