பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம்
சிவகங்கையில் பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்;

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள TNPSC Group I முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது. எனவே, இத்தேர்விற்கு போதிய கால அவகாசம் உள்ளதால், இளைஞர்கள் மேற்காணும் தேர்விற்கு விண்ணப்பம் செய்து பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்