பொதுமக்கள் நலன் கருதி வேதாரண்யத்தில் இருந்து பழனிக்கு புதிய பேருந்து
வேதாரண்யம் நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்;
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து, நாள்தோறும் பழனிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து சென்று வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக பழனிக்கு சென்று வந்த பேருந்துக்கு பதிலாக புதிய பேருந்து நேற்று இயக்கப்பட்டது. புதிய பேருந்தினை வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார். நாகை மாவட்ட ஆத்மா ஆலோசனை குழு உறுப்பினர் உதயம் முருகையன் முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்து கிளை மேலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளைத் தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஹரி கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ரவி, துணைச் செயலாளர் அழகேசன், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் , நடத்துனார்கள், நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யத்தில் இருந்து, நாள்தோறும் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு பழனி சென்று, பின்னர் பழனியில் இருந்து அதிகாலை 6:45 மணிக்கு புறப்பட்டு வேதாரண்யம் வந்து சேருகிறது. பொதுமக்கள் நலன் கருதி இந்த அதிநவீன புதிய பேருந்து இயக்கப்படுகிறது என கிளைக் கழக மேலாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.