உடையாப்பட்டியில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

செயற் பொறியாளர் தகவல்;

Update: 2025-04-08 09:02 GMT
சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் உடையாப்பட்டி காமராஜர் காலனியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் கிழக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News