மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் இறைச்சி கடைகளை மூட உத்தரவு
மாநகராட்சி கமிஷனர் உத்தரவு;
சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவின் பேரில் இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகள் மூடப்பட வேண்டும். மேலும் அன்றைய தினம் சிறப்பு குழுக்கள் 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அப்போது அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.